4/2/08

உதைப்பேன்!

"திருப்பதி கோயில்லே
மாலை மாற்றி தாலி கட்ட நான் ஸ்பெஷல் பெர்மிஷுன் வாங்கி வச்சிருந்தேன்... அங்கே பத்திரிக்கைக்கரர்களும் ரசிகர்களும் வந்தது கூட்டம் சேர்ந்துட்டா என் பெயர் கேட்டு விடுமோன்னு அஞ்சினேன்... இதையெல்லாம் calculate பண்ணித்தான் பத்திரிக்கை நண்பர்களிடம் பேசறச்சே, 'திருப்பதிக்கு காமேராவோட வந்து போட்டோ எல்லாம் எடுக்காதீங்க..'ன்னு ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்...

'வந்தா' ன்னு ஒரு பிரஸ் நண்பர் கேட்டார். 'உதைப்பேன்' ன்னு சொன்னேன்... உடனே இன்னொருத்தர் சொன்னார், 'அந்த மாதிரி வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செய்துட்டா, பின்னால அசிங்கமா போயிடும்' ன்னு .. அந்த மாதிரி நேருக்கு நேர் தவறைச் சுட்டிக்காட்டினப்போ ஐ வாஸ் வெரி ஹாப்பி... உடனே 'சாரி' சொன்னேன்.

கூடவே, 'இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க...காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதை தவிர எனக்கு வேற வழி தோணாது' ன்னும் சொன்னேன்... பிகாஸ், ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கும் நான் பயப்படறதில்லே... அதோட, நான் ஒண்ணு நினைச்சுட்டேன்னா அது எனக்கு நடந்தே தீரணும்..."

-திருமணத்தின் போது நடந்த கலாட்டா பற்றி ரஜினி ...
விகடன் 22.3.81

No comments: