4/25/08

தமிழ் பழமொழிகள்

என்னைக் கவர்ந்த தமிழ் பழமொழிகள் சில.
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
  • காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
  • பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
  • ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
  • மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • ஆழாக்கு அரிசி, மூளாக்கு பானை, முதலியார் வருகிற வீராப்பை பாரும்.
  • ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
  • அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.

நன்றி: பசுபதி பிள்ளை , Wikiquote - Tamil proverbs.

No comments: