8/8/08

குசேலன்


கவிதாலயாவின் குசேலன் பார்த்தேன். மலையாளத்தில் முதலில் வந்த படத்தின் மூலக்கதை தெரியாது. தமிழ்படுத்தியதில் பல கோலிவுட் மாற்றங்கள் இருப்பதாகப் பட்டது. இது ரஜினி படம் அல்ல. சில நிமிடங்கள் வந்து போகும் ரஜினிக்கு என் இவ்வளவு தாரை தப்பட்டம் என்று தெரியவில்லை. வசனங்கள் மூலமாக தன்னை தானே தூக்கி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்றும் தெரியவில்லை.

பசுபதி நன்றாகத்தான் நடிக்கிறார். ரஜினிக்கு பக்கவாத்தியமாக இருப்பதனாலோ என்னவோ படம் பூராவும் கடுப்பான முகத்தோடு வலம் வருகிறார். வெயில் படத்தில் எவ்வளவோ better range of acting இருந்தது. பல நடிகர்களும் நடிகைகளும் படம் முழுவதும் வந்து போகிறார்கள். வடிவேலு தன் நகைச்சுவை strategy மாற்ற வேண்டியது அவசியம். தாங்க முடியவில்லை சாமி!
என்னதான் ரஜினி, படத்தின் கடைசி 20 நிமிடங்களில் உணர்ச்சிகரமாக நடித்தாலும், தர்மதுரை, 6-60 வரை போன்றவற்றில் காட்டிய திறமை இதில் இல்லை என்பதே உண்மை. இவ்வளவு பெரிய படம் கிடைத்தும் G.V.Prakash இசையில் சொதப்பி தள்ளியிருக்கிறார். ஒளிப்பதிவு மட்டும் தரம்.

அரைவேக்காடு .