2/12/08

பனி

கருணை என்பது பனித்துளிப் போல் படருமிடமெல்லாம் அழகுபடுத்துகிறது. -
யாரோ.

அப்படி ஒரு பனி படர்ந்த தினத்தில் உடம்பு முடியாமல் வீட்டில் உட்கார்ந்து ஜன்னல் வழி பார்த்த போது சில சிந்தனைகள் தோன்றின. பனி பெய்யும்போது பார்ப்பது வாழ்கையின் simple pleasuresஇல் ஒன்று. வீட்டின் பின்வெளியில் வெள்ளை துவாலை போர்த்தியது போல் பனி விழுந்து கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நள்ளிரவிலும் பனி படர்ந்த பூமி ஒளிர்வதை கண்டு வியந்து இருக்கிறேன். நகர வெளிச்சமும் நிலா வெளிச்சமும் சேர்ந்து பனியின் மீது பிரதிபலிப்பதே காரணம் என்று நினைக்கிறேன். வழக்கமான சத்தமும் கூச்சலும் இல்லாமல் இந்த பனி நாட்களில் ஒரு சலனம் குடி கொண்டு இருப்பது உண்மை. மாசும் அழுக்கும் அடியில் புதைந்து இருப்பதை மறைத்து தூய தோற்றம் தந்து, முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் பனியே, உனக்கு நன்றி.

2/7/08

ஆல்பம் 2002

கவிதாலயா தயாரித்து வசந்தபாலன் இயக்கிய ஆல்பம் திரைப்படம் ஒரு சிலரால் மட்டும் கவனிக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான இந்த படம், வெயில் போன்றதொரு படத்தை இயக்கும் திறமை வசந்த பலனிடம் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டியது.

பளிச்சென்ற புதுமுகங்கள், நேர்த்தியான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை, அருமையான இசை என எல்லாம் சேர்ந்து ஒரு clean படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது நிஜம். கார்த்திக் ராஜாவின் இசையும் பாடல்களும் இசைஞானியை நினைவுபடுத்தின. அசாதாரண இசை கோர்ப்பு இந்த பாடல்களில் காண முடிந்தது.பாலச்சந்திர மேனன், ஆர்யன் ராஜேஷ் ,ஸ்ருதிகா, விஜயகுமார் ஆகியோர் செயற்கைத்தனம் இல்லாமல் நடித்திருந்தனர்.

பார்க்காதவர்கள் குறுந்தகட்டில் (DVD) பார்க்கவும்.

2/6/08

இந்த புலிகள் பசித்தால் புல்லையும் தின்னும்


அயல்நாட்டு தமிழர்களின் தமிழ் தாகம் தணிக்க சன் டிவி வந்தது. ஆனால் இந்த தமிழ் மெகா சீரியல்களின் இம்சையை மட்டும் தாங்க முடியவில்லை. எவ்வளவு பேர் நக்கல் பண்ணினாலும் விடாமுயற்சியுடன் புதிய சீரியல்கள் வரக் காரணம் என்ன?அதைப் பார்த்து ரசிக்கும் பரதேசிகள்தான்! (pun intended)

இந்த juvenile அவலங்களைப் பார்பதோடு இல்லாமல் அதைப் பெருமையாக பார்ட்டிகளில் அலசி விமர்சிக்கும் பெருசுகளை நினைத்து தலையால் அடித்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய? நல்ல திரைப்படங்களை (வெயில், பருத்தி வீரன், குருதிப்புனல், மஹாநதி, மொழி போன்றவை) ரசித்துப் பார்த்து ஊக்குவிக்க வக்கில்லாதவர்கள், இந்த தமிழ் சீரியல்களை விரும்பிப் பார்ப்பதுதான் தமிழ் சினிமாவிற்கு சாவு மணி.

இந்த புலிகள் பசித்தால் புல்லையும் தின்னும்...