4/25/08

அங்கே வருவது யாரோ

"நேற்று இன்று நாளை" படத்தில் எம் ஜி ஆர் மற்றும் மஞ்சுளா படிய அற்புதமான பாடல். MSV இசையும், SPB குரலும் இந்த பாட்டை மறக்க முடியாதபடி செய்தன. ஹீரோ, ஹீரோயின் உடைகளில் 70's இன் கோமாளித்தனம் இருந்தாலும் இந்தபாடல் மிக இனிமையானது. 5 அல்லது 6 வது வகுப்பு படிக்கும்போது அடிக்கடி ரேடியோவில் கேட்டு மூளையில் நிரந்திரமாக பதிவான பாடல் இது. பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் இந்த படத்தைத் தயாரித்தது நடிகர் S.A.அசோகன்!

Ange Varuvadhu Yaaro
Uploaded by Singasongoflove. - Parties, dorm life, and other college videos.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் நான் எடுத்த படங்கள் சில.

ரஜினியின் பேச்சு

கர்நாடகா கண்டனக் கூட்டத்தில் ரஜினியின் பேச்சு.

தமிழ் பழமொழிகள்

என்னைக் கவர்ந்த தமிழ் பழமொழிகள் சில.
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
  • காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
  • பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
  • ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
  • மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • ஆழாக்கு அரிசி, மூளாக்கு பானை, முதலியார் வருகிற வீராப்பை பாரும்.
  • ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
  • அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.

நன்றி: பசுபதி பிள்ளை , Wikiquote - Tamil proverbs.

4/2/08

பாஷைக்கு அடிமைகள்

"எனக்குத் தெரிந்த பாஷைகளில் தமிழ் பாஷையைப்போல் இனிமையானது எங்கும் இல்லை" என்று சொல்கிறார் பாரதியார். பாரதியாருக்கு எத்தனை பாஷை தெரிந்திருந்தது என்பது முதல் கேள்வி, அதிகமாய் சொன்னாலும், நான்கு ஐந்து பாஷைகளுக்கு மேல் தெரிந்திருக்க நியாயமில்லை. கதையில் கிணற்றுத் தவளை சொல்லிற்று;- " நான் பார்த்தவற்றிலே இந்த கிணற்றைவிட பெரிய சமுத்ரம் எதுவும் கிடையாது" என்று.
'பாஷைக்கு அடிமைகள்' என்ற கல்கியின் கட்டுரையிலிருந்து. விகடன் 1.9.32

உதைப்பேன்!

"திருப்பதி கோயில்லே
மாலை மாற்றி தாலி கட்ட நான் ஸ்பெஷல் பெர்மிஷுன் வாங்கி வச்சிருந்தேன்... அங்கே பத்திரிக்கைக்கரர்களும் ரசிகர்களும் வந்தது கூட்டம் சேர்ந்துட்டா என் பெயர் கேட்டு விடுமோன்னு அஞ்சினேன்... இதையெல்லாம் calculate பண்ணித்தான் பத்திரிக்கை நண்பர்களிடம் பேசறச்சே, 'திருப்பதிக்கு காமேராவோட வந்து போட்டோ எல்லாம் எடுக்காதீங்க..'ன்னு ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்...

'வந்தா' ன்னு ஒரு பிரஸ் நண்பர் கேட்டார். 'உதைப்பேன்' ன்னு சொன்னேன்... உடனே இன்னொருத்தர் சொன்னார், 'அந்த மாதிரி வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செய்துட்டா, பின்னால அசிங்கமா போயிடும்' ன்னு .. அந்த மாதிரி நேருக்கு நேர் தவறைச் சுட்டிக்காட்டினப்போ ஐ வாஸ் வெரி ஹாப்பி... உடனே 'சாரி' சொன்னேன்.

கூடவே, 'இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க...காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதை தவிர எனக்கு வேற வழி தோணாது' ன்னும் சொன்னேன்... பிகாஸ், ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கும் நான் பயப்படறதில்லே... அதோட, நான் ஒண்ணு நினைச்சுட்டேன்னா அது எனக்கு நடந்தே தீரணும்..."

-திருமணத்தின் போது நடந்த கலாட்டா பற்றி ரஜினி ...
விகடன் 22.3.81