2/12/08

பனி

கருணை என்பது பனித்துளிப் போல் படருமிடமெல்லாம் அழகுபடுத்துகிறது. -
யாரோ.

அப்படி ஒரு பனி படர்ந்த தினத்தில் உடம்பு முடியாமல் வீட்டில் உட்கார்ந்து ஜன்னல் வழி பார்த்த போது சில சிந்தனைகள் தோன்றின. பனி பெய்யும்போது பார்ப்பது வாழ்கையின் simple pleasuresஇல் ஒன்று. வீட்டின் பின்வெளியில் வெள்ளை துவாலை போர்த்தியது போல் பனி விழுந்து கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நள்ளிரவிலும் பனி படர்ந்த பூமி ஒளிர்வதை கண்டு வியந்து இருக்கிறேன். நகர வெளிச்சமும் நிலா வெளிச்சமும் சேர்ந்து பனியின் மீது பிரதிபலிப்பதே காரணம் என்று நினைக்கிறேன். வழக்கமான சத்தமும் கூச்சலும் இல்லாமல் இந்த பனி நாட்களில் ஒரு சலனம் குடி கொண்டு இருப்பது உண்மை. மாசும் அழுக்கும் அடியில் புதைந்து இருப்பதை மறைத்து தூய தோற்றம் தந்து, முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் பனியே, உனக்கு நன்றி.

No comments: